ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்களை திறப்பது தொடர்பாக, அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார். கொரோனா பரவலை தடுக்க அனைத்து வழிப்பாட்டுத் தலங்களும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி மூடப்பட்டன. வரும் 8 ஆம் தேதி முதல் உரிய விதிமுறைகளை பின்பற்றி வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், வழிபாட்டுத் தலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்க அனைத்து சமய தலைவர்களுடன் தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் ஹிந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ, ஜெயின் சமயங்களை சேர்ந்த 34 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை திறப்பது தொடர்பான சமய பிரதிநிதிகளின் கருத்துகளை தலைமைச் செயலாளர் கேட்டறிந்தார்.
Discussion about this post