தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப் பெறக்கூடும் என்றும், இது நாளை மாலை, மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சென்னையை பொறுத்தவரை நகரின் ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும் என்றும் பாலச்சந்திரன் குறிப்பிட்டார். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அம்மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக எல்லைப் பகுதிகளிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post