உலகிலேயே அமெரிக்காவில் அதிகளவிலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்து 45 ஆயிரமாக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 2 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பிரேசிலில் 4 லட்சத்து 11 ஆயிரம் பேரும், ரஷ்யாவில் 3 லட்சத்து 70 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் 2 லட்சத்து 83 ஆயிரம் பேரும், இங்கிலாந்தில் 2 லட்சத்து 67ஆயிரம் பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இத்தாலியில் 2 லட்சத்து 31 ஆயிரம் பேரும், பிரான்ஸில் ஒரு லட்சத்து 82 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, ஜெர்மனி, துருக்கி போன்ற நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை சுமார் 25 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Discussion about this post