சேலம் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பாதிக்கப்பட்ட 11 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், கடந்த 21 நாட்களாக மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று யாருக்கும் இல்லாததால் சேலம் மாநகராட்சி பகுதி மட்டும் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 35 பேரில் 31 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, சிகிச்சை பெற்று வரும் 4 பேரும் ஒரிரு நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என தெரிவித்துள்ள மாவட்ட நிர்வாகம், விரைவில் சேலம் மாவட்டம் முழுவதும் பச்சை மண்டலமாக அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
Discussion about this post