இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா கடல்பகுதியில் உள்ள பெலாவன் துறைமுகத்தில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் ஜக் லீலா எண்ணெய் கிடங்கு வெடித்து சிதறி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நிண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் இருந்து 7 பேரின் எரிந்த உடல்களை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். டி.என்.ஏ பரிசோதனை மூலம் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
Discussion about this post