கச்சத்தீவு திருவிழாவிற்காக இலங்கையில் ஜவுளி வியாபாரம் செய்வதற்காக சென்ற திண்டுக்கலை சேர்ந்த சுமார் 300 பேர், ஊரடங்கு காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயத் திருவிழா கடந்த மாதம் நடைபெற்றது. இதனையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி, நிலக்கோட்டை, குண்டலப்பட்டி, அணைப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 300 ஜவுளி வியாபாரிகள், இலங்கை சென்று அங்கேயே தங்கி வியாபாரம் செய்து வந்தனர். கொரோனா பாதிப்பு காரணமாக அந்நாட்டில் திடீரென ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், தமிழகம் திரும்பமுடியாமல் அங்கேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு உணவு, இடம், மருத்துவ வசதி ஏதும் இன்றி தவித்து வருவதாக கூறும் அவர்கள், தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post