கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய சீனாவின் வூஹானில் இயல்பு நிலை திரும்பியதையடுத்து நடைபெற்ற மின்னொளி நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். கொரோனா தொடங்கிய வூஹானில் 76 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் அந்த நகரம் முழுவதும் சீல் வைக்கப்பட்டு சுமார் 1 கோடியே 10 லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவில்லை. 11 வாரங்கள் நீடித்த ஊரடங்கு இரு தினங்களுக்கு முன்பு வாபஸ் பெறப்பட்டது. வூஹானில் இயல்பு நிலை திரும்பியதால் மக்கள் வழக்கம் போல் தங்கள் பணிகளை தொடங்கி உள்ளனர். ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளதால் வேறு பகுதிகளுக்கு பணிக்கு செல்கின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள வூஹான் மக்கள், அதனை கொண்டாடும் விதமாக யாங்க்ஸ் நதிக்கரையில் மின்னொளி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுரசித்தனர். 76 நாட்கள் வீட்டுக்குள் முடங்கியிருந்த தங்களுக்கு இத்தகைய நிகழ்ச்சிகள் புத்துணர்ச்சியை அளிப்பதாக வூஹான் மக்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post