ஊரடங்கு உத்தரவை மீறி பொது இடங்களில் மாணவர்கள் விளையாடினால், சம்பந்தப்பட்ட பெற்றோர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திண்டுக்கல் கோட்டாட்சியர் சுப்பிரமணி வீட்டு உபயோக சிலிண்டர்களை, ஹோட்டல்கள் மற்றும் வணிக ரீதியாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும், நீர்நிலைகள் மற்றும் காலியிடங்களில் மாணவர்கள் கூட்டாக விளையாடுவது தெரியவந்தால் அவர்களின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Discussion about this post