72 வயதான இந்திய யானை வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் தேசிய உயிரியல் பூங்காவில் கருணைக்கொலை செய்யப்பட்டது. 1948 ஆம் ஆண்டில் இந்தியாவில் பிறந்த அம்பிகா, வட அமெரிக்காவில் பழமையான ஆசிய யானைகளில் ஒன்று. 8 வயதில் இந்த பெண் யானை கூர்க் காட்டில் பிடிக்கப்பட்டது. 1961 வரை தனிமையில் வைக்கப்பட்டிருந்த அம்பிகா, பின்னர் பொதுமக்கள் பார்வைக்காக வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் தேசிய மிருகக்காட்சிசாலைக்கு அனுப்பப்பட்டது. ஆசியாவை சேர்ந்த யானை மந்தையின் அன்புக்குரியவையாக திகழ்ந்த அம்பிகா, தனது 72 வயதில் பல்வேறு உபாதைகளால் அவதிப்பட்டு வந்தது. தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாமல் அவதியடைந்த்து வந்த அம்பிகாவை மனிதாபிமானத்துடன் கருணைக்கொலை செய்ய உயிரியல் பூங்கா நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து அம்பிகா யானை கருணைக்கொலை செய்யப்பட்டது. கடந்த 59 ஆண்டுகளாக மிருகக்காட்சி சாலையில் தனது குறும்பு தனத்தால் பல தலைமுறை பார்வையாளர்களை உற்சாகப்படுத்திய அம்பிகாவுக்கு, பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post