அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி கிராமத்தில் உள்ள மருதையாற்றில், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 300மீட்டர் நீளத்திற்கு தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. தமிழக அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படும் இப்பணியினை, அம்மாவட்ட ஆட்சியர் ரத்னா நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில், பணிகளின் தரத்தை சோதித்த மாவட்ட ஆட்சியர், தடுப்பணை அமையும் இடம், தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த அமைக்கப்படவுள்ள கால்வாய் வசதிகள் ஆகியவற்றை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.
Discussion about this post