திண்டுக்கல்லில் அமையவுள்ள புதிய அரசு மருத்துவக்கல்லூரி இன்னும் ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒடுக்கம் பகுதியில் 327 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவக்கல்லூரி அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற விழாவில் மருத்துவக்கல்லூரிக்கான கட்டுமான பணிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். விழாவில், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், அன்பழகன், செல்லூர் ராஜூ, ஓ.எஸ்.மணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதிய அரசு மருத்துவக்கல்லூரி இன்னும் ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் எனவும், பல்வேறு நவீன மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் கூறினார். ஓராண்டுக்கு 150 மாணவர்கள் படிக்கும் வகையில் புதிய மருத்துவக்கல்லூரியை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளதாகவும் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.
Discussion about this post