நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்குச்சாவடி பட்டியல் கடந்த 6ம் தேதி வெளியிட்டது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயார் செய்வது தொடர்பான வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. (gfx in)
அதன்படி, இந்திய தேர்தல் ஆணையத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை கொண்டு புதிய பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பட்டியலின் முதல் பகுதியில் மாவட்டத்தின் பெயர், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் பெயர், உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற வேண்டும் என்றும், வாக்குச்சாவடியின் பெயர் மற்றும் முகவரி, கட்டிடத்தின் முகப்பு தோற்றம், தரை வரைபடம் ஆகியவை இணைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இணைக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர், புகைப்படம், தந்தை அல்லது கணவர் பெயர் உள்ளிட்டவை இடம் பெற வேண்டும் என்றும், 2020 வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் இந்த வாக்காளர் பட்டியலில் விடுபடவில்லை என வாக்காளர் பதிவு அலுவலர் சான்று அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியலை, அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வரும் 20ம் தேதி வெளியிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post