நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து நடிகர் விஷால் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் நடைமுறைகளை 3 மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். நடிகர் சங்கத்தை தனி அதிகாரிகள் தொடர்ந்து நிர்வகிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், மேல் முறையீட்டு வழக்கு தொடர்பாக ஏப்ரல் 8 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
Discussion about this post