பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு, கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாணவ-மாணவிகள் தங்கள் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, தும்மல் மற்றும் இருமல் ஏற்படும்போது கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் ஏற்பட்டால், மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது பரவி வரும் கொரோனாவுக்கு மட்டுமல்லாமல், தொற்று நோய்கள் ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post