ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை, 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதற்கு, உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. .
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ, கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கு விசாரணையை, 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், ஐக்கிய மக்கள் சுதந்திர அமைப்பு தொண்டு நிறுவனம் ஆகியவை வலியுறுத்தின. இந்த வழக்கு நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற முடியாது என்றும், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வே இந்த வழக்கை விசாரிக்கும் எனவும் தீர்ப்பளித்தனர்.
Discussion about this post