திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை திந்துவைப்பதற்காக தூத்துக்குடி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சாலையின் இருமருங்கிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினத்தில் ஒரு கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். இந்தநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தூத்துக்குடிக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விமான நிலையத்தில், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதிக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் அதிமுக நிர்வாகிகள் மலர்க்கொத்துகள் வழங்கி வரவேற்பு அளித்தனர்.
பின்பு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சாலையின் இருமருங்கிலும் திரண்ட ஏராளமான பொதுமக்கள் வாழ்தது முழக்கங்கள் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, முத்தையாபுரத்தில் உள்ள முல்லக்காடு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களை சந்தித்து, அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
முக்காணி பகுதியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எராளமான பொதுமக்கள் திரண்டு, பொன்னாடை அனிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில், பொதுமக்களிடம் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அப்போது உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஏழை-எளிய விவசாயிகளின் எண்ணங்களை துயர்துடக்கும் அரசாகவும், விவசாயத்திற்கும் தொழிலுக்கும் முன்னுரிமை அளிக்கும் அரசாகவும் அதிமுக அரசு உள்ளது என பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தெற்கு ஆத்தூரில், சாலையின் இருமருங்கிலும் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த பொதுமக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அங்கு பொதுமக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது, தமிழகத்தில் ஏழை என்ற சொல் இல்லை என்ற நிலையை உருவாக்குவதே அதிமுக அரசின் லட்சியம் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, ஆறுமுகனேரியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக, சாலையின் இருமருங்கிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். இதையடுத்து, முதலமைச்சர் சாலையில் நடந்துசென்று பொதுமக்களிடம் கைகுலுக்கி, தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். எத்தனையோ சோதனைகள் வந்தாலும், மக்களின் ஆதரவுடன் தவிடுபொடியாக்கி அதிமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்று, வருவதாகவம், இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
Discussion about this post