அரியலூர் அருகே உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பார்த்தீனியம் செடிகளை அழிக்கும் பணியில் அரசுக்கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 17-ம் தேதியிலிருந்து வருகின்ற 21-ம் தேதி வரை பார்த்தீனியம் செடிகள் ஒழிப்பு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் பார்த்தீனிய செடிகளை அழிக்கும் பணியில் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அரியலூர் அருகேயுள்ள தாமரைக்குளம் ஊராட்சியில் பார்த்தினியச் செடிகளை அழிக்கும் பணியினை ஊராட்சி மன்ற தலைவர்
பிரேம்குமார் தொடங்கி வைத்தார். இப்பணியில் அரியலூர் அரசு கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், துப்புரவு பணியாளர்கள், மற்றும் தூய்மை காவலர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த முயற்சியை பொதுமக்கள் பெரிதும் பாரட்டிவருகின்றனர்.
Discussion about this post