திண்டிவனத்தில் தனது கண் முன்னே விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அமமுக கிளைக் கழக செயலாளரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டிவி. தினகரன் கண்டும் காணாமல் சென்றதால் தொண்டர்கள் அதிருப்தியடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு வெளியே வரும்போது, காணை ஒன்றியம், திருக்குணம் கிராமத்தைச் சேர்ந்த அமமுக கிளைக் கழகச் செயலாளர் முத்துசாமி என்பவர் தினகரன் கண்முன்னே சாலை விபத்தில் சிக்கினார். இதில் அவருடைய கால் முறிந்து பலத்தக் காயம் ஏற்பட்டது. ஆனால், தினகரன் அதனைக் கண்டும் காணாமல் தனது காரில் புறப்பட்டு சென்றார். இதனைக் கண்ட அமமுக தொண்டர்கள் மிகவும் அதிருப்தி அடைந்தனர்.
Discussion about this post