இந்திய எல்லைக்குள் மீன்பிடித்த 3 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்திய கடற்படையினர் ஹெலிக்காப்டர் மூலம் மன்னார் வளைகுடா மற்றும் இந்திய கடல் எல்லையில் தினமும் ரோந்து பணி மேற்கொள்வது வழக்கம். அதன்படி தனுஷ்கோடி அருகே ரோந்து பணி மேற்கொண்ட போது அங்கு இலங்கை கடற்படையை சேர்ந்த மூவர் அத்துமீறி இந்திய எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதனை கண்ட இந்திய கடற்படையினர் அவர்களை தனுஷ்கோடி அரிச்சல்முனை கரைக்கு செல்லும் படி தெரிவித்துள்ளனர். அதனை அவர்கள் ஏற்க மறுத்ததால் மூன்று மீனவர்களையும் ஹெலிகப்டர் மூலம் அரிச்சல்முனைக்கு விரட்டிச் சென்றனர். அங்கே, இலங்கையை சேர்ந்த அந்தோனி சுகன், சகாய வினிஸ்ரோ, தோமஸ் லூவிஸ் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
Discussion about this post