பல்வேறு துறைகளில் சென்ற ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட இந்த நிதியாண்டில் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி, உயர்கல்வித்துறைக்கு சென்ற ஆண்டு 4 ஆயிரத்து 484.21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு 5 ஆயிரத்து 52.84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், சிறுகுறு நடுத்தர தொழில்கள் மேம்பாட்டுத்துறைக்கு சென்ற ஆண்டு 476.26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு 607.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொழில்துறையை பொருத்தமட்டில் கடந்த ஆண்டு 2,747.96 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு 2,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த சுகாதாரத்துறைக்கு கடந்த ஆண்டை விட 3 ஆயிரத்து 299.2 கோடி ரூபாய் உயர்த்தி 15 ஆயிரத்து 863 கோடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சமூகநலத்துறையை பொருத்தமட்டில் 2020-21ம் நிதியாண்டில் 2 ஆயிரத்து 534 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கைத்தறி மற்றும் துணிநூல்துறைக்கு கடந்த ஆண்டு ஆயிரத்து 170.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு ஆயிரத்து 224.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post