நாளை நடைபெறுவதாக இருந்த அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வரும் 16 ஆம் தேதி நடைபெறுமென தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும் தேர்தல் பணிகள் தொடர்பாகவும் பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த 14 மாவட்டங்களுக்கான ஆலோசனை கூட்டம், 16 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் காலை 10 மணி முதல் தொடங்கும் ஆலோசனைக் கூட்டத்தில், தேனி, அரியலூர், தருமபுரி, கோவை மாநகர், கோவை புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மாலை 4 மணி முதல், சேலம் மாநகர், சேலம் புறநகர், நாமக்கல், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post