டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது தொடர்பாக ஓரிரு நாட்களில் மத்திய அரசு நல்ல முடிவை அறிவிக்குமென மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்றுள்ள அமைச்சர் ஜெயக்குமார், நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து பேசினார். அப்போது, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், அதிமுக முன்னாள் எம்.பி.க்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பின்போது, டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது தொடர்பான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஓரிரு நாட்களில் நல்ல முடிவை மத்திய அரசு அறிவிக்குமென எதிர்பார்ப்பதாக கூறினார்.
Discussion about this post