5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான அரசாணையை ரத்து செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்..
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post