கிருத்திகையை முன்னிட்டு சென்னை பாடியில் உள்ள திருவலிதாயம் திருவல்லிஸ்வரர் கோயிலில் பக்தர்கள் பல்வேறு காவடிகள் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில், 32 சிவ ஸ்தலங்களில் ஒன்றாகும். குரு ஸ்தலமாக உள்ள இக்கோயிலின் 73-ஆம் ஆண்டு தை கிருத்திகையை முன்னிட்டு தங்க மயில் சேவை தேர்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் 1 அடி முதல் 30 அடி வரையிலான அலகுகளை குத்தியும், பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடிகளை எடுத்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
விழாவை முன்னிட்டு தங்கத் தேரில் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக உலா சென்ற முருகனை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து, இரவு தீ மிதி திருவிழா மற்றும் மிளகாய் அபிசேகம் ஆகியவை நடைபெற்றது.
Discussion about this post