உலக புற்று நோய் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை அடையாறில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சாந்தா தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புற்று நோயை கண்டு மக்கள் அஞ்சப்பட வேண்டாம் என்றும், ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்த முடியும் என்றார். பொதுமக்கள் மத்தியில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேபோல், உலக புற்றுநோய் தினத்தையொட்டி, இந்திய மருத்துவ சங்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அண்ணா நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் பொதுமக்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தினர் இணைந்து புற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபயணம் மேற்கொண்டனர்.
சென்னை மாநகர காவல்துறை மேற்கு இணை ஆணையர் விஜயகுமாரி கலந்து கொண்டு விழிப்புணர்வு நடைபயணத்தை தொடங்கி வைத்தார். புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபயணத்தில் பங்கேற்றவர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி சென்றனர்.
Discussion about this post