ஒடிசா மாநிலம் மதுப்புராவில் விவசாயத்திற்கு பயன்படும் புதிய வகை இயந்திரம் வடிவமைத்த சிறுவனை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்துக்கு அழைத்துள்ளார்.
ஒடிசா மாநிலம் மதுப்புரா பகுதியைச் சேர்ந்த பிப்லப் குமார் 7 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். தனது தந்தையின் வேலைப்பளுவை குறைக்கும் விதமாக 10 ஆயிரம் ரூபாய் செலவில் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த இயந்திரம் ஒரே நேரத்தில் உழுதல், தண்ணீர் பாய்ச்சுதல், விதைகள் போடுவது என 6 பணிகளை செய்கிறது.
பல விருதுகளை வென்றுள்ள இந்த இயந்திரத்தைக் கண்டு வியந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறுவனை தேநீர் விருந்துக்கு அழைத்துள்ளார். இதனால் சிறுவனும் அவரது குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
Discussion about this post