நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக பிரதிநிதிகள் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பின்னர், சேலம் வந்தடைந்தார். அப்போது அவரை சந்தித்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். முதியோர் உதவித்தொகை, விதவை பெண்களுக்கான உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர், மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக பிரதிநிதிகள் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தங்கமணி, மற்றும் சரோஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Discussion about this post