தமிழக முதலமைச்சராக வேண்டும் என்ற மு.க.ஸ்டாலினின் முயற்சியை திமுகவினரே தடுத்துவிடுவார்கள் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சிக்கிம் மாநில கால்நடை பராமரிப்பு, தோட்டக்கலை துறை அமைச்சர் எல்.என்.சர்மா சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சிக்கிம் மாநிலத்தில் பால் பதப்படுத்தும் பண்ணை அமைப்பது குறித்து தமிழக முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவெடுக்கவிருப்பதாக கூறினார். மேலும், இந்து மதத்தை வெறுக்கும் திமுகவுக்கு தமிழகத்தில் யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
Discussion about this post