தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைக்க அனுமதி வழங்கிய பிரதமர் மோடிக்கும், மத்திய அரசிற்கும் முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே ஆண்டில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது ஒரு வரலாற்று சாதனை நிகழ்வு என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மருத்துவ கல்லூரிகள் அமைக்க, 3 ஆயிரத்து 575 கோடி ரூபாய்க்கான மதிப்பீட்டிற்கு அனுமதி வழங்கி, அதில் 2 ஆயிரத்து 145 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக முதலமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பாக ஆயிரத்து 430 கோடி ரூபாய் வழங்கப்பட இருப்பதாகவும் முதலமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுவரை வரலாறு கண்டிராத சிறப்புமிக்க அனுமதி வழங்கிய பிரதமர் மோடிக்கும், மத்திய அரசிற்கும் மனமார்ந்த நன்றியை, தமிழ்நாட்டு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பாக தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Discussion about this post