திமுக தலைவர் ஸ்டாலினை விட உள்ளாட்சி துறையை சிறப்பாக தாங்கள், நடத்தி வருவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் மாநில அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில்,
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன், உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,ஸ்மார்ட்சிட்டி, பாதாள சாக்கடை திடக்கழிவு மேலாண்மை என பல திட்டங்கள் குறித்து
இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்… மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இந்திய அளவில் 8 வது இடத்தில் தமிழகம் உள்ளதாகவும் கூறியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினை விட உள்ளாட்சியை பல மடங்கு திறம்பட நிர்வாகம் செய்வதாகவும், கருணாநிதி இருந்திருந்தால் தன்னை பாராட்டியிருப்பார் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து, இயற்கை பேரிடரின் போது மின்கம்பங்களை அகற்றவும், மழைக்காலங்களில் சகதிகளை அகற்றவும், வீடற்றோரை மீட்பதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ள வாகனங்களின் செயல்பாட்டை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
Discussion about this post