திமுகவில் வாரிசு அரசியல் என்பது தொடர்ந்து நடந்து வருவதாகவும் , ஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் தலைவர் என்பது முன் கூட்டிய முடிவு செய்யப்பட்டுள்ளாதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப்பேசிய அவர், அதிமுகவில் சிண்டுமுடியும் வேலையை திமுக செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார். மத்திய அரசை அதிமுக அரசு கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்காது எனவும், தமிழகத்திற்கு நன்மை அளிக்கும் திட்டங்களை மட்டுமே ஆதரிக்கும் எனவும் எனவும் கூறினார்.
முதலமைச்சர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது அருகே உள்ள பள்ளி வாசலில் தொழுகை ஆரம்பித்தது. அப்போது தனது உரையை நிறுத்திய முதலமைச்சர் தொழுகை முடிந்த பின் தனது உரையை தொடர்ந்தது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Discussion about this post