கர்ப்பிணி பெண்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதில் அமெரிக்கா அரசு கட்டுப்பாடுகளைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது..
அமெரிக்கா நாட்டில் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாட்டு விதிகளை மேற்கொண்டு வருகிறது.. அந்த வகையில் கர்ப்பிணி பெண்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது..
இதற்கு காரணம் கர்ப்பிணிகள் அமெரிக்காவில் வந்து குழந்தை பெற்றால் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை எளிதில் கிடைத்துவிடும்.. இதனால் ரஷ்யா சீனா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா குடியுரிமை பெறுவதற்காகவே அமெரிக்காவுக்கு வந்து குழந்தை பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது..
இதனால் அமெரிக்க அரசு சுற்றுலா விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.. இந்நிலையில் அமெரிக்கா விசாவுக்கு விண்ணப்பிக்கும் பெண்களிடம் கர்ப்பிணியா என்றும் கருவுறும் திட்டம் இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பப்படுவதாக கூறப்படுகிறது..
Discussion about this post