2019ஆம் ஆண்டிற்கான “பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால சக்தி புரஸ்கார்” விருதை வென்ற 49 குழந்தைகளுடன் பிரதமர் மோடி இன்று உரையாடல் நடத்துகிறார்.
கலை, கல்வி, கலாச்சாரம், புதிய கண்டுபிடிப்பு, துணிச்சல் மற்றும் சமூக சேவை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு “பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால சக்தி புரஸ்கார்” விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டிற்கான இந்த விருது 49 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. விருதுகளை சில தினங்களுக்கு முன்னர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழந்தைகளுக்கு வழங்கினார். இந்நிலையில் விருதுகளை வென்ற 49 குழந்தைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடல் நிகழ்த்துகிறார். டெல்லியில் நடைபெறும் பிரதமர் மோடியுடனான இந்த சந்திப்பு, குழந்தைகளுக்கு தங்களது தனித்திறமையை மென்மேலும் அதிகரிக்க உதவிகரமாக அமையும்.
Discussion about this post