இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சுலவேசி (Sulawesi) தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் இது 7 புள்ளி 7 ஆக பதிவானது. 6 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. சக்தி வாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டவுடன் சுலவேசி (Sulawesi) தீவை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அந்த தீவுக்கு உட்பட்ட பலு ( Palu) நகரத்தை சுனாமி தாக்கியது. சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு சுனாமி பேரலைகள் தாக்கியதாக இந்தோனேசிய பேரிடர் ஆய்வு மையம் கூறியுள்ளது. நிலநடுக்கம்,சுனாமிக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலு ( Palu)நகர மக்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நில நடுக்கம் , சுனாமிக்கு பிந்தைய நில அதிர்வுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து இதுவரை முழுமையான தகவல் வெளியாக வில்லை.கடந்த ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 500 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post