கடலூர் மலையாண்டவர் கோவிலில் நடந்த தெப்ப உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
கடலூரில் உள்ள பழமை வாய்ந்த மலை ஆண்டவர் கோவிலில் தை மாதத்தில், கரிநாள் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நடந்த இந்த விழாவில், ராஜராஜேஸ்வரி உடனுறை ராஜராஜேஸ்வரர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 108 திரவிய பொடிகளினால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டதை அடுத்து கோவில் குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. இதில், கலந்து கொண்ட பக்தர்கள் குளத்தில் வெற்றிலையில் சூடம் ஏற்றி நேர்த்தி கடன் செலுத்தினர். இந்த திருவிழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Discussion about this post