ஜிஎஸ்டியால் சிறு குறு வணிகம் பாதிக்கப்படும் என எதிர்கட்சிகளால் பரப்பப்படும் கருத்தானது, உண்மைக்கு புறம்பானது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உற்பத்தியாளரோ, வணிகத்தில் ஈடுபட்டுள்ளவரோ, யாராக இருந்தாலும் 40 லட்ச ரூபாய்க்கு கீழ் தொழில் செய்பவர்கள், ஜிஎஸ்டி கட்டத் தேவையில்லை எனும் போது, சிறு குறு வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறானது என்று கூறினார்.
Discussion about this post