நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு இனியும் கருணை காட்டாமல் பிப்ரவரி 1-ஆம் தேதி கட்டாயம் தூக்கிலிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 80வது பிறந்தநாளையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழிலாளர்கள் நலனுக்காக பல வளர்ச்சி பணிகளை செய்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி என புகழாரம் சூட்டினார். மேலும், நிர்பயா குற்றவாளிகளுக்கு இனியும் கருணை காட்டாமல் அவர்களை தூக்கிலிட வேண்டும் என்றும், இந்த தண்டனை ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Discussion about this post