மாட்டுப் பொங்கலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டம் சூரியூரில் இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. போட்டியில் பங்கேற்பதற்காக சூரியூர் கோயில் காளையை ஊர்பொதுமக்கள் மேள தாளங்களுடன் வாடிவாசலுக்கு அழைத்து வந்தனர்.மேலும் 600 காளைகளும், 500க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்களும் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர். முன்னதாக மாடுகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.அதனைத்தொடர்ந்து வாடி வாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை, வீரர்கள் வீரத்துடன் அடக்கி வருகின்றனர்.நிகழ்ச்சியின் பாதுகாப்பு பணிக்காக 500-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.மேலும் மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சைக்காக மூன்று 108 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post