பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை வெடித்ததற்கு நடுவில் ஒரு ஜோடி திருமணம் செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அடிக்கடி பல எரிமலைகள் வெடித்து சிதறுவது வழக்கம். அந்த சமயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்ந்து சென்று விடுவார்கள்..
அந்த மாதிரியான எரிமலை வெடிப்பு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து தெற்கு பகுதியில் 66 கிலோ மீட்டர் தொலைவில் சீற்றம் அடைய ஆரம்பித்தது.
இந்நிலையில் சீறும் எரிமலைக்கு நடுவே சினோ வால்பர் – கேட் என்ற காதல் ஜோடி திருமணம் செய்துள்ளது. 8 ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடியின் திருமணம் எரிமலை அமைந்துள்ள பகுதியில் உள்ள பண்ணை நிலத்தில் நடைபெற தொடங்கியது.
ஆனால் சிறிது நேரத்திலேயே எரிமலை சிதறி லார்வா குழம்புகள் வெளியேற எவ்வித அச்சமும் இல்லாமல் திருமண நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.
இதனை பயன்படுத்தி புகைப்படக்கலைஞர் புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Discussion about this post