குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக பங்கேற்காதது, அதன் கூட்டணி இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நெருங்கிய கூட்டணியாக கருதப்படும் திமுக பங்கேற்காதது, கூட்டணி இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக திமுக கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
Discussion about this post