டிக்டாக் செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் விரைவில் புதிய செயலியை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.
ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு ‘லஸ்ஸோ’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. வீடியோ எடிட்டிங், ஃபில்டர்கள் என டிக்டாக்கின் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய லஸ்ஸோ முதல்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகமானது.
இதனை இந்த ஆண்டு மே மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்த ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த செயலியை வாட்ஸ் அப் செயலியில் ஒருங்கிணைக்கும் பணி நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் லஸ்ஸோ அறிமுகமானால் பிரபல சமூக வலைத்தள செயலியான டிக்டாக் செயலிக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. லஸ்ஸோ செயலியை இதுவரை லட்சக்கணக்கானோர் டவுன்லோட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post