திருச்சி தேசிய கல்லூரி நூற்றாண்டு தொடக்க விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.
திருச்சி தேசிய கல்லூரி நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். இதனையடுத்து விழாவில் பேசிய அவர், இந்தியா உயர்கல்வியில் கடந்த 2018-19ம் ஆண்டில் 26.3 சதவிகிதமாக இருந்ததாகவும், இதில் தமிழகம் 46.1 சதவிகிதத்துடன் முதல் இடத்தில் இருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் பல முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளபோதும் கல்வி கற்றலில் இந்தியா பின் தங்கி உள்ளதாகவும்,500க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் இருந்தபோதும் உலக அளவில் முதல் 300 இடங்களில் இந்திய கல்வி நிறுவனங்கள் இடம் பெற முடியாத நிலை உள்ளது என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
எனவே, இந்த நிலையை மாற்ற அரசு மட்டும் தனியாக செயல்பட முடியாது என்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம் எனவும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
Discussion about this post