திமுகவின் செயல், கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி ஆகியோர் கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் எந்த ஒப்பந்தமும் இல்லாமல் மாவட்ட அளவில் பேசி முடிவெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த முயற்சிகளுக்கு மாவட்ட அளவில் இதுவரை ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும், திமுக தலைமையில் இருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 303 ஊராட்சி ஒன்றிய பதவிகளில் இருந்து இதுவரை 2 இடங்கள் மட்டுமே திமுக தலைமையால் வழங்கப்பட்டுள்ளதாகவும், 27 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளில், ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியோ, துணைத்தலைவர் பதவியோ வழங்கப்படாதது, கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்றும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post