மதுரை அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு கிராமங்களில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழாவின் முன்னேற்பாடுகளை தென்மண்டல ஐ.ஜி சண்முகராஜேஸ்வரன் நேரில் ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்டத்தில் 15-ஆம் தேதி அவனியாபுரம், 16-ஆம் தேதி பாலமேடு, 17-ஆம் தேதி அலங்காநல்லூர் என தொடர்ந்து 3 நாட்கள் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி சண்முகராஜேஸ்வரன் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஜல்லிக்கட்டு விழா நடைபெறும் வாடிவாசல் பகுதி, காளை மாடுகள் ஓடுதளம் மற்றும் காளைகளை ஒன்றிணைக்கும் பகுதி என அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்ட அவர், ஏற்பாட்டாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பு பணியில் கடந்த ஆண்டை விட அதிகளவு காவல்துறையினர் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post