சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 13-ஆம் தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
கடந்த 2018-ஆம் ஆண்டு, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, இந்த விவகாரத்தை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றுவதாக, கடந்தாண்டு நவம்பர் மாதம் அறிவித்தது. இந்த நிலையில், சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க, 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வில், சபரிமலை தொடர்பான வழக்குகள், வரும் 13-ம் தேதி முதல் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
Discussion about this post