சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 456 ரூபாய் அதிகரித்து 30, 344 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 29 ஆயிரத்து 888 ரூபாயாக விற்பனையானது. இன்று ஒரு கிராம் 3 , 736 ரூபாயில் இருந்து 57 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 3, 793 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரத்திற்கு 456 ரூபாய் அதிகரித்து, 30,344 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராமிற்கு 60 ரூபாய் அதிகரித்து, 3 , 983 ரூபாயாகவும், சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து 31 , 864 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து 51 ரூபாய் 10 காசுகளுக்கும், கிலோவுக்கு 700 ரூபாய் அதிகரித்து 51 , 100க்கும் விற்பனையாகிறது.
Discussion about this post