அமமுகவை அரசியல் கட்சியாகப் பதிவு செய்யத் தடை விதிக்கக் கோரிப் புகழேந்தி தொடுத்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
அமமுகவை அரசியல் கட்சியாகப் பதிவு செய்யக் கூடாது எனத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிச் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஒரு அரசியல் கட்சியைப் பதிவு செய்ய 100 பேர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்பதையும், தினகரனின் நடவடிக்கை பிடிக்காததால் தான் உட்பட மூத்த நிர்வாகிகள் 15 பேர் விலகி விட்டதாக் குறிப்பிட்டுள்ளார்.
அதனால், கட்சியைப் பதிவு செய்ய அளித்திருந்த விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்யத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இது குறித்துப் பதிலளிக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று 12 மணியளவில் நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
Discussion about this post