ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது ஏற்படும் விபத்துக்களை எதிர்கொள்ளத் தமிழகம் முழுவதும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது பொதுமக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள், நட்சத்திர விடுதிகள் ஆகியவற்றில் விபத்துக்கள் ஏற்பட்டால் அவர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளித்து உயிர்களைக் காக்கும் வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நள்ளிரவு நேரத்தில் கூடுதல் மருத்துவர்கள் செவிலியர்கள் பணியில் இருப்பார்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ள 50 பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்கள், 15 இருசக்கர வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதேபோலத் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
Discussion about this post