வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வளிமண்டலத்தின் மேலடுக்கில் நடைபெறும் சுழற்சியின் காரணமாகத் தென்மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
Discussion about this post