ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணும் பணி இன்று தொடங்குகிறது.
81 இடங்களை கொண்டுள்ள ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கு நவம்பர் 30-ந்தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில்,தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்கு தொடங்கி, இரவு 8 மணி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பேசிய அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி வினய்குமார் சவுபே, முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும் என்றும், அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என தெரிவித்துள்ளார்.
Discussion about this post